புதுடில்லி : கொரோனாவை எதிர்கொள்வது குறித்து, சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். யாரும் பீதி அடைய தேவையில்லை'' என்பது நமது தாரக மந்திரம் என பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
" தயாராக இருப்போம், பீதி வேண்டாம்" - இதுவே தாரக மந்திரம்; சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி