கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்த பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்பு 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் நோய் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது என்னுமு் நிலையில் பக்தர்களின் வருகைக்கு தடை செய்து திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில்களில் முக்கிய பூஜை மற்றும் திருவிழாக்களையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.