சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு இந்து அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. வடபழனி முருகன் கோயிலில் தெர்மாமீட்டர் மூலம் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் 107 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்து அறநிலையத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வட பழநி முருகன் கோயிலில் முழு ' அலர்ட் '