எல்லா கடவுளும் ஃபிட்டா இருக்கறப்போ ஏன் விநாயகர் மட்டும் தொந்தியோட இருக்கார்? அதோட ரகசியம் தெரியுமா
தொப்பையும் வயிறுமா தும்பிக்கையுடன் விநாயகர் ஏன் இருக்கிறார் தெரியுமா? அதற்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றனவாம். அதுபற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

 


​விநாயகர் தோற்றம்


விநாயகர் என்றாலே தடைகளை தகர்த்தெறியும் தும்பிக்கை நாதன். அதிலும் விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகருக்கும் அவருடைய பக்தர்களுக்கும் கொண்டாட்டம் தான்.


விநாயகர் தான் இந்துக்களின் முழுமுதற் கடவுள் என்று மதிக்கப்படுபவர். அதிலும் ஒரு தனித்துவமான தோற்றத்துடன் விளங்கக் கூடியவர். யானைத் தலை, தொப்பை வயிறு, ஐங்கரம், தும்பிக்கை என்று இவரது அழகை கூறிக் கொண்டே போகலாம். அவரைப் பற்றிய புதிரான கதைகள், அவரின் தோற்றழகு எல்லாரையும் ஏன் உலகளவில் அவரை வணங்கச் செய்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் இந்த தோற்றத்தில் இருக்க காரணம் என்னவென்று தெரியுமா? அதன் பின்னால் மறைக்கப்பட்ட ரகசியம் என்னவென்று தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.


இந்த வடிவம் தான் உளவியலாளர்கள், புராணவியலாளர்கள் என்று ஒருவரையும் சும்மா விடவில்லை. பிள்ளையாரை நோக்கிய ஆராய்ச்சியில் அவர்களை முழுவதுமாக ஈடுபடுத்தியது.