பக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்... எப்படி சாத்தியமானது தெரியுமா?

ராமாயத்திலும், அதைத்தொடர்ந்து உப கதைகளிலும் ராம பக்த ஆஞ்சநேயர் குறித்த கதைகள் ஏராலம் கேட்டிருப்போம். மிக வலிமையான ஆஞ்சநேயர் தன் பரம பக்தனிடம் தோல்வி அடைந்தார்.. எப்படி தெரியுமா?


ஆஞ்சநேயரின் பரம பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு வினோத ஆசை இருந்தது. அதாவது, ஆஞ்சநேயருடன் சொக்காட்டம் ஆட வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.


இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன் ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.

ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார்.
“பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது.” என்றார். பக்தனும் சம்மதித்தான்.

இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, 'ஜெய் அனுமான்' என்ற படி காய்களை உருட்டினான்.