அனுமனுக்கு வடை மாலை ஏன்…? பரமாச்சாரியாரின் விளக்கம்!

அனுமனுக்கு சாத்தப்படும் வடை மாலை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.


ஒரு முறை வட நாட்டில் இருந்து அன்பர் ஒருவர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்... பரமாச்சாரியாவை தரிசனம் செய்யும்போது அந்த நபர் சற்றே நெளிந்தவாறு நின்றார்... அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பெரியவா... “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.


ந்த வட நாட்டு அன்பர் தட்டுத் தடுமாறியவாறு பேசலானார்.... “ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…”

“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்…” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”


மெளனமாக இருந்தார் மஹா பெரியவா. அந்த அன்பரே தொடர்ந்தார்:... “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.

கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.