புதுயுக நகர வாசிகள் வெளியில் சென்று சாப்பிடுவதை இரண்டு வகையாக பிரிக்க முடியும். முதலாவது… குளித்து, பார்ஷான உடை அணிந்து, இருப்பதிலேயே பளபளக்கும் காலணிகளுடன் பந்தாவாக சென்று, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து உண்பது. இரண்டாவது, புதிதாக தெரு ஓரங்களில் திறக்கப்பட்ட கடைகளிலோ, வெறித்தனமாக ருசி கொண்ட ரோட்டுக் கடைகளிலோ சாப்பிடுவது. முதலாவது வகையில் பல ப்ளஸ்கள் இருந்தாலும், இரண்டாவது வகையில் உள்ள உடலின் கடைசி நாடி, நரம்பைத் துள்ளி குதிக்கச் செய்யும் ஸ்ருதி இருக்காது.
ஆனால், சாலையோர உணவுகள் என்று சொல்லப்படும், Street food-களை, வயிற்றைக் கெடுக்காமல், அதே நேரத்தில் ருசியிலும் வஞ்சம் வைக்காமல் வகை வகையாக அடுக்கினால்… அப்படித்தான் அடுக்கினார்கள் Sigree Global Grill-ன் Street Food திருவிழாவில்…
வட இந்திய, குறிப்பாக டெல்லியின் இதயமாக உள்ள தஹி பூரி, பானி பூரி, சமோசா சாட், பெல் பூரி, தஹி வடா, தந்தூரி முர்க், மட்டன் கிலாஃபி சீக் உள்ளிட்ட உணவுகள் ஏசி அறையிலும் நம் உடலை 12 மணி உச்சி வெயிலில் இருக்க வைக்கும் அளவுக்கு சூடேற்றும். கொலைப் பசியுடன் இதை டாப் டூ பாட்டம் தெறிக்கவிட்ட பின்னர், ஸ்டார்ட்டர்ஸ்…
பஃபே உணவு என்பதால், வகை தொகை இல்லாமல் ஸ்டார்ட்டர்ஸ் வகை வறுத்த உணவுகள் திரும்ப திரும்ப கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. மீன், இறால், சிக்கன், மட்டன் என தந்தூரி வகையில் சமைக்கப்பட்ட ஸ்டார்ட்டர்ஸ் ஒரு பக்கம் என்றால், மஷ்ரூம், உருளை, பனீர் போன்ற வெஜ் ஸ்டார்ட்டர்ஸ் மறுபக்கம். மூக்கில் நீர் வழிய வழிய அனைத்திலும் இரண்டு, மூன்று ரவுண்டுகள் போன பின்னர்…